Home இலங்கைமத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை போராட்டம்:-

மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை போராட்டம்:-

by admin

மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு எதிராக நாளை காலை 9.30 மணிக்கு, மத்திய வங்கிக்கு எதிரில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நாளைய தினம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More