492
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் தங்களுடைய மேன்முறையீடுகளை ஜூன் 10ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும். அதனால் அந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சமுர்த்தி தெரிவில் ஏதாவது முறைகேடு இடம் பெற்றிருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி வரை தங்களுடைய மேன்முறையீடுகளை மாவட்ட சமுர்த்தி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்,
அந்த மேல்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை என தெரிவித்தார்
Spread the love