கொழும்பு கோட்டை, காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் இந்தியாவை சேர்ந்த முகாமையாளர் ஒருவர், இந்திய பிரஜையான தலைமை சமையல் கலை நிபுணரை கொலை செய்துள்ளதாக கோட்டை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05.07.23) இரவு கத்தியால் குத்திய இந்த கொலைச் சம்பவத்தில் அஜய் குமார் என்ற 29 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் முகாமையாளர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு உணவகத்தில் சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.