455
பயணிகள் தரிப்பிடத்துடன் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானதில் , பேருந்து சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் , பயணிகள் தரிப்பிடமும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு பயணித்த பேருந்து . மீசாலை , புத்தூர் சந்திக்கு அருகில் பயணிகள் தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் வேலை செய்யவில்லை என சாரதி கூறிய சில நிமிடத்திற்குள் பேருந்து விபத்து உள்ளானது என சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேருந்து இந்திய அரசின் உதவியில் சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love