429
கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினா் காவல்நிலையத்தில் ல் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2023/08/IMG-20230820-WA0032.jpg)
Spread the love