334
யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாக பூசணி அம்மனுக்கு , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தியுள்ளனர். அம்மன் சிலைக்கு கொட்டகை அமைக்கும் முயற்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சிலர் ஈடுபட்டு இருந்தனர். அவ்வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அதனை அவதானித்து , யாழ் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து அங்கு வந்த பொறுப்பதிகாரி , சிலை விவகாரம் ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட் டது. அதனால் இப்பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும் ஆயின் , உரிய அனுமதிகளை பெற்று , அமையுங்கள். அதனை விடுத்து அனுமதியின்றி கொட்டகை அமைத்து , தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என கூறி , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை அங்கிருந்து காவல்துறையினா் அப்புறப்படுத்தினர்.
அதேவேளை நேற்றைய தினம் இரவு முழுவதும் இரு காவல்துறையினா் அம்மன் சிலைக்கு காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love