348
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (1) காலை 10 மணியளவில் மன்னாரில் நினைவு கூரப்பட்டது. மன்னார் பஜார் பகுதியில் உள்ள அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மன்னார் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. -இதன் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,கலையருவி இயக்குனர் அருட்தந்தை செல்வநாயகம் அடிகளார்,மன்னார் தமிழ் சங்கத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.
Spread the love