யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கம் நினைவு பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது
கல்லூரியின் பீடாதிபதி சு. பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச லலீசன் “தர்மலிங்கம் தந்த கொடை” என்ற பொருளில் நினைவு பேருரை ஆற்றினார்
கல்வியியல் கல்லூரிக்கு தர்மலிங்கம் குடும்பத்தார் 220 பரப்பு காணியை கோப்பாய் பிரதேசத்தில் உவந்து அளித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகளை விதந்து பேசினார். குறிப்பாக கடந்த 23 ஆண்டுகளில் 4500 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றுவதாக தெரிவித்தார்
கல்லூரியின் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளை கலாநிதி பா.தனபாலன் முன்னிலைப்படுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் நிறைவுரை ஆற்றினார்.
கல்லூரி சமூகத்தினரும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் அபிமானிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்