451
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் தங்கரதத்தில் , எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நாளைய தினம் திங்கட்கிழமை காலை, 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று மாம்பழ திருவிழா இடம்பெற்றது.
நாளை மறு தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சப்பர திருவிழாவும், புதன்கிழமை காலை 07 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.
Spread the love