345
யாழ். நகர் பகுதியில் வீடொன்றில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 16 ஆம் திகதி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் போது வீட்டில் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசி ஒன்றும் , ஒரு தொகை பணமும் திருடப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை பகுதியை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த வீட்டில் திருடப்பட்ட கையடக்க தொலைபேசியும் , ஒரு தொகை பணத்தினையும் மீட்டுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைங்களை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love