கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் . கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.
கடந்த ஜூன் 18ஆம் திகதி கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள துடன் இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு , கனடா தூதரகத்தின் சிரேஸ்ட அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையிலேயே கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக இந்திய விசா வழங்கும் சேவை மையம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், “செயல்பாட்டு காரணங்களுக்காக செப்டம்பர் 21-ஆம் திகதி முதல் மறு அறிவிப்த்தல் வரை இந்தியாவுக்கு செல்லும் விசா வழங்கும் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.