Home இலங்கைதுப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

by admin

 

அவிசாவளை இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் நேற்றிரவு(20)  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக   காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் தல்துவ பகுதியைச் சேர்ந்த 27, 36 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான   நடவடி்கையினை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More