319
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
யாழ் சென்ற சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
யாழ்.கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதேவேளை சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பெரியளவிலான இசை நிகழ்ச்சியை நடாத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love