186
வடமாகாணத்தில் உள்ள அரச மருத்துவர்கள் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது பற்றி அறிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்த போராட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டே இவ்வாறு வட மாகாணத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றைம குறிப்பிடத்தக்கது.
Spread the love