363
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் ” எனும் தொனிப்பொருளில் துஆ பிராத்தனை இன்று (20) சம்மாந்துறையில் ஹிஜ்றா சந்தியில் இடம் பெற்றது. பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் 14 நாட்களாக இடம் பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் .
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் ஒன்று கூடிய பொது மக்கள் ஹிஜ்றா சந்தியில் கொட்டும் மழையில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றதுடன் ஹிஜ்றா சந்தியில் இலங்கை மற்றும் பலஸ்தீன கொடிகள் பறப்பவிடப்பட்டுள்ளதோடு சம்மாந்துறை மக்களின் அழுகைக்குரல் எனும் ஆதரவு பதாதையும் தொங்கவிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love