292
காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப்பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி வேண்டியும், இஸ்ரேலைக் கண்டித்தும் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
Spread the love