365
வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை காவல்துறையினரினால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு காவல்துறையினர் சென்ற போது அதனை கடத்தி வந்தவர் தப்பித்துள்ளார். சிலை கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் கூறினார்.
Spread the love