337
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.
1 கிலோ 370 கிராம் ஹெரோயின், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம் மாவா மற்றும் 1,075 போதை மாத்திரைகளும் சோதனை நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டன.
Spread the love