338
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீளுவாகியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
அதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக மனதாக தெரிவானார். அதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.
உள்நாட்டு யுத்தம் காரணமாக ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் செயலிழந்து காணப்பட்ட நிலையில் 37 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் மீள் உருவாக்கப்பட்டுள்ளது.
Spread the love