338
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21.03.24) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love