ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால போராட்டங்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் நேற்று (02.04.24) மாலை மூவரும் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இறுதி அனுமதி கிடைத்ததன் பின்னர் சிறப்பு முகாம் பொறுப்பாளர்கள் அவர்களை விடுவித்தனர்.
இதனையடுத்து கொழும்புக்கு அனுப்புவதற்காக காவற்துறை வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் மூவரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.