225
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 19ஆம் திகதிக்கு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவையை ஆரம்பிக்க சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பிற்போடப்பட்டது.
அதனால், மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love