Home இலங்கைவட்டுக்கோட்டை வைத்தியசாலை நோயாளர் விடுதி திறப்பு!

வட்டுக்கோட்டை வைத்தியசாலை நோயாளர் விடுதி திறப்பு!

by admin

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி இன்றையதினம் புதன்கிழமை (17.07.24)  திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி திரு.எஸ்.செந்தூரன் அவர்களது கடின முயற்சி காரணமாக இந்த விடுதியானது மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது

வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச் சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More