Home இலங்கையாழ்.நீதிமன்றுக்கு போதையில் சென்ற நபர் விளக்கமறியலில்!

யாழ்.நீதிமன்றுக்கு போதையில் சென்ற நபர் விளக்கமறியலில்!

by admin

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் வந்த நபரை விளக்ளமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றுக்கு வந்த நபர் மதுபோதையில் வந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் மன்றுக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து, அந்நபரை கைது செய்த நீதிமன்ற காவற்துறையினர் மன்றில் அவரை முற்படுத்தினர்.

அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More