733
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியை சேர்ந்த கடற்புலிகளின் முன்னாள் போராளியான புரட்சி என அழைக்கப்படும் , நடேசு பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடந்த 04ஆம் திகதி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love