564
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே புஸ்பராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கடந்த 09ஆம் திகதி சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். மறுநாள் அவர்கள் காங்கேசன்துறை நோக்கி தமது காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, காரும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு , தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love