காரைத்தீவு பகுதியில் மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த வேளை உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதுடன் ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஒருவா் உயிாிழந்துள்ளதுடன் 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் த்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் . 6 வீடுகள் முற்றாக இடிந்தும், 265 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கபடப்டுள்ளது