171
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இரண்டாவது தடவையாக இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள அவரிடம் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிணை முறி ஏல விற்பனையின் போது அர்ஜூன் மகேந்திரன் தலையீடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவினை நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love