யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளா. ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி , உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான்
சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , திருடிய நகைகளை இளைஞனிடம் இருந்து மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.