246
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.
Spread the love