Home இலங்கை கஞ்சாவுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்

கஞ்சாவுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில்

by admin
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இருவரையும்  காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஷாலினி ஜெயபாலச்சத்திரன் அனுமதித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது.
படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை புலனாய்வாளர்கள் சோதனையிட்ட போது , 92 பொதிகளில் 213. 899 கிலோ கிராம் கேரளா கஞ்சா படகினுள் காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து , படகில் வந்த இருவரையும் கைது செய்து , படகில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் , கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் காவல்துறையினர் முற்படுத்தினர்.
அதன் போது, சந்தேகநபர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் , அவர்களை  காவல்துறை   தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும் என காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்
காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட பதில் நீதவான் இருவரையும் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More