கோழி இறைச்சி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் குறித்த உத்தரவு நீக்கப்பட்டுள்ளதென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் அறிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு குழுவில் வெள்ளைச் சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான சந்தைக் கேள்வி, இறக்குமதி விலை, சந்தை விலை ஆகியனவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, வெள்ளைச் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 93 ரூபா எனவும் தோலுடனான கோழி இறைச்சி ஒரு கிலோ 410 ரூபா எனவும் தோல் அற்ற கோழி இறைச்சி ஒரு கிலோ 490 ரூபா எனவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்
150
Spread the love
previous post