28
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் பிரதான சந்தேகநபர் பதுங்கியிருந்த இடம் ஒன்று தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
Spread the love