Home இலங்கை யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது!

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது!

by admin

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பெற்றவர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாடு அனுப்பி வைக்காதமையால் , பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், பணத்தினை பெற்ற ஆசிரியரை கைது செய்து யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும், இளைஞனிடம் கையளிக்கிறேன் என மன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார்.

அதனை அடுத்து , ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை ஒத்திவைத்து.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More