Home இலங்கைகொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு

கொழும்பிற்கு பேருந்தில் கடத்தப்பட்ட கேரள கஞ்சா கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு

by admin

யாழில் இருந்து கொழும்பிற்கு  சென்றுகொண்டிருந்த  இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய  பேருந்தில்  கொண்டுசெல்லப்பட்ட   சுமார் இரண்டுகிலோ  கேரள கஞ்சா கிளிநொச்சிப்  பொலிசாரால்  இன்று புதன் கிழமை  மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த  பேருந்தில்  கேரள கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக  கிளிநொச்சி காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட  இரகசியத்தகவலுக்கமைய  கிளிநொச்சி காவல்நிலைய  நிலைய மதுவொழிப்புப் பிரிவினரால் குறித்த பேருந்து வழிமறிக்கப்பட்டு சோதனை செய்தபொழுது இரண்டுகிலோ  கேரளா கஞ்சாவுடன்  யாழ்ப்பாணம்  அச்சுவேலியைச்  சேர்ந்த  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலதிக  விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிசார்  மேற்கொண்டு  வருவதுடன் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்  இரண்டு சந்தேக நபர்களையும்  முன்னிலைப்படுத்த  உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More