கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம்,சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்


