462






அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்றனர்.
திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டு வருவதற்கான ஒரு களமாக அந்நிகழ்வு அமைந்திருந்தது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலர் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர். நிகழ்வில் அருந்ததி சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.







Spread the love

