77

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்குடன் நடைப் பயிற்சி கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கலாசாலை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த சத்தியமூர்த்தி மற்றும் கலாசாலையின் உயிரியல் பாட முன்னாள் விரிவுரையாளர் வ.சி. குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டு கழகத்தை ஆரம்பித்து வைத்தனர்.
கலாசாலை வேலை நேரத்தின் பின்னர் ஆர்வமுள்ளோர் பிற்பகல் 5 மணி தொடக்கம் ஆறு மணி வரை நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நோக்குடன் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .
உடற்பயிற்சியின் அவசியம் பற்றி எடுத்துரைத்த மருத்துவர் த சத்தியமூர்த்தி வாரம் ஒரு முறை தானும் கலாசாலைக்கு வருகை தந்து நடைப்பயிற்சியில் கலந்து கொள்வதாகவும் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் சிலரும் பங்கேற்று வழிகாட்டல்களை வழங்குவர் என்றும் தெரிவித்தார்.
கலாசாலையின் விரிவுரையாளர்கள் பலர் நடைப்பயிற்சியில் பங்கேற்றனர் அத்துடன் விடுதி மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


Spread the love