படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்துள்ளாா். மேலும்
பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அதன்படி, இந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளாா்.
இந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை முன்மொழிய ஒரு விசேட குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

