409
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (19/03/2025) தாக்கல் செய்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்த வேட்புமனுக்கள் புதன்கிழமை (19/03/2025) மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது பல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

