Home விளையாட்டுமன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்

மன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்

by admin


மன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம்  பவுண்ட்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.   போட்டியின் விதிமுறையை மீறியுள்ளதாக தெரிவித்து கால்பந்து சம்மேளனத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகையை   தொகையை செலுத்த மன்செஸ்டர் அணியும் சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற எஃப்.ஏ.( FA) கோப்பைக்கான காலிறுதி போட்டி ஒன்றில் மன்செஸ்டர் யுனைடெட், செல்சியா அணிகள்  பங்குபற்றி  போட்டியில்  செல்சியா அணி  1-0 என வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் அண்டர் ஹெராராவை நடுவரான  மைக்கேல் ஒலிவர் வெளியேற்றினார்.  இதற்கு மற்ற வீரர்கள் நடுவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்தே இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியின்போது ரசிகர்களோ, வீரர்களோ விதிமுறையை மீறினால் அதற்கு அந்தந்த கால்பந்து அணிதான்  பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More