Home உலகம்முன்னாள் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை   காரா பிராக்ஸ்டன்  விபத்தில் உயிாிழப்பு

முன்னாள் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை   காரா பிராக்ஸ்டன்  விபத்தில் உயிாிழப்பு

by admin

டெட்டிராய்ட் ஷாக் (Detroit Shock) அணிக்காக விளையாடி இரண்டு முறை WNBA  சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனை காரா பிராக்ஸ்டன் (Kara Braxton), அட்லாண்டாவில்  கடந்த சனிக்கிழமை  இடம்பெற்ற கார் விபத்தில் உயிாிழந்துள்ளாா். அவருக்கு   உயிாிழக்கும் போது 43  வயதாகும்

2006 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் டெட்டிராய்ட் ஷாக் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த  6 அடி 6 அங்குல உயரம் கொண்ட காரா பிராக்ஸ்டன்  2007 ஆம் ஆண்டு WNBA All-Star அணியில் இடம்பெற்றார்.  ஜோர்ஜியா பல்கலைக்கழகத்திற்காக விளையாடிய போது, 2002 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக வீராங்கனையாக   தெரிவானார்.  டெட்டிராய்ட் ஷாக், துல்சா ஷாக், பீனிக்ஸ் மெர்குரி மற்றும் நியூயார்க் லிபர்ட்டி ஆகிய அணிகளில் அவா் விளையாடியுள்ளாா்.

காரா பிராக்ஸ்டனின் மூத்த மகன் ஜெலானி, ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு நியூயார்க் லிபர்ட்டி மற்றும் பல விளையாட்டு அமைப்புகள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றன.

#KaraBraxton #WNBA #DetroitShock #BasketballLegend #RestInPeace #SportsNews #NYLiberty #GeorgiaBulldogs #WNBALegend

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More