Home இலங்கைஇணைப்பு02 – கொத்மலையில் பாாிய விபத்து – உயிாிழப்புகள் அதிகாிப்பு

இணைப்பு02 – கொத்மலையில் பாாிய விபத்து – உயிாிழப்புகள் அதிகாிப்பு

by admin

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.  மேலும் , உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மலை காவல்துறையினா், சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

கொத்மலையில் பாாிய விபத்து – 13 போ் பலி

May 11, 2025 at 07:06

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள்  பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில்  13     உயிரிழந்ததுடன்   பலா்  காயமடைந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி   ஒரு  குழுவை ஏற்றிச் சென்ற    இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இன்று  ஞாயிறுக்கிழமை (11) அதிகாலை 4.00 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் கம்பளை, பேராதனை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தொிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை  காவல்துறையினா்  முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More