Home இலங்கைவெள்ளவத்தை  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலில் பதற்றம்

வெள்ளவத்தை  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலில் பதற்றம்

by admin

 

முள்ளிவாய்க்காலில்  இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ்  மக்களை நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் இன்று (மே 18) காலை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது ஒன்றுகூடலின் போது    பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக  தொிவிக்கப்படுகின்றது.

அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில்   இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளை மலர்களுடன் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.

இதனை மற்றொரு குழு   சீர்குலைக்க முயன்றதனால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில்    நினற  காவல்துறையினா்  , போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைக்க  முற்பட்டமை தொடா்பில்        காணொளி  பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More