18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இன்று (03) அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியினை வென்று முதல் தடவையாக பெங்களூரு அணி சம்பியனாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக் குட் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. [

