Home பிரதான செய்திகள்முதல் தடவையாக பெங்களூரு சம்பியனானது 

முதல் தடவையாக பெங்களூரு சம்பியனானது 

by admin

 

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இன்று (03)  அஹமதாபாத்தில்   நடைபெற்ற இறுதிப் போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ் அணியினை வென்று முதல் தடவையாக பெங்களூரு  அணி சம்பியனாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ததனையடுத்து   முதலில் துடுப்பெடுத்தாடிய  ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து  191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக் குட்   பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை  மாத்திரமே பெற்ற நிலையில்    ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. [

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More