Home இலங்கைமன்னார் முசலி பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது!

மன்னார் முசலி பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசமானது!

தவிசாளர் ஆனார் கியாதியன் சாயூ நலீம் - உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அப்துல் ரசீது தன்ஸீல்!

by admin

முசலி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று (25.06.25) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் முசலி பிரதேச சபையில் நடைபெற்றது.

இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயூ நலீம் மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

இதன்போது தொழிலாளர் கட்சி உறுப்பினர் முகமது காமில் 07 வாக்குகளையும்,தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் 09 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

அதி கூடிய வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கியாதியன் சாயு நலீம் முசலி பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு,சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கி இருந்தனர்.

உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அப்துல் ரசீது தன்ஸீல் உப தலைவராக தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More