Home இலங்கையாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 2 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட தாதி

யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 2 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட தாதி

by admin

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர்  நாட்டைவிட்டு வெளியேறாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் சிறுமியின் மணிக்கட்டு பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந்த விடயத்தில் வைத்தியத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி யாழ் . நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் , வழக்கு விசாரணைகளை நடைபெற்று வருகிறது.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்த்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

அது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்நிலையில், தாதிய உத்தியோகத்தர் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை சிறுவர், பெண்கள் பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அதனை அடுத்து தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More