Home இலங்கைபோதைப்பொருளுடன் 06 பேர் கைது

போதைப்பொருளுடன் 06 பேர் கைது

by admin
யாழ்ப்பாணத்தில் ஹெரோயி ஹெரோயின்  ன் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு பேர்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஒரு சந்தேக நபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும் ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை  யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் காவல்துறையினரால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 அரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.  கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More