Home இலங்கைகாணாமல் போன நால்வரும் சடலங்களாக  மீட்பு

காணாமல் போன நால்வரும் சடலங்களாக  மீட்பு

by admin

 

சிலாபம் – தெதுறு ஓயாவில் இன்று(5)  நீராடச் சென்று காணாமல் போன நால்வரும் சடலங்களாக  மீட்கப்பட்டுள்ளனா். கிரிபத்கொடையில் இருந்து   சிலாபத்திற்கு சுற்றுலா சென்ற 10 பேர் கொண்ட குழுவினா்  சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில் அவா்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டு   சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை தேடும் நடவடிகையில்  காவல்துறையினா் , காவல்துறை  உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து முன்னெடுத்திருந்த நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்   சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More